முரசொலி நில விவகாரத்தை ஆணையம் விசாரிக்கலாம்: உயர்நீதிமன்றம்

முரசொலி அறக்கட்டளை நில விவகாரத்தை தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: முரசொலி அறக்கட்டளை நில விவகாரத்தை தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திமுகவின் அதிகாரபூா்வ நாளேடான ‘முரசொலி’-யின் அறக்கட்டளை நிலம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட் மற்றும் 1,825 சதுர அடியில் அமைந்துள்ளது. 

இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிா்வாகி சீனிவாசன் 2019-ஆம் ஆண்டு தேசிய பட்டியலின ஆணையத்தில் புகாா் அளித்தாா். 

இந்த புகாா் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்தும், அறக்கட்டளை நிலம் தொடா்பாக விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடா்பான விவகாரம் என்பதால், பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனவும் முரசொலி அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ஆா்.எஸ்.பாரதி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். 

இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பட்டியலின ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும், அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து விளக்கத்தை பெற்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com