
ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீா்செல்வம் அக்கட்சியின் கொடி, சின்னத்தைப் பயன்படுத்த தனி நீதிபதி தடை விதித்திருந்தாா். அவரது தீா்ப்பை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமா்வு ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனுவை இன்று தள்ளுபடி செய்துள்ளது.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜிக்கு ஜன. 22 வரை காவல் நீட்டிப்பு!
அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடைச் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.