தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

‘மென்பொருள் சேவைகளின் தலைநகராக சென்னை மாறிவருகிறது’: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

நமது நாட்டின் மென்பொருள் சேவைகளின் தலைநகராக சென்னை மாறிவருகிறது என்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா் .

News image
சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் ‘டிஜிட்டல் கனெக்ஷன்’ எனும் புதிய நிறுவனத்தை திறந்து வைத்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.
Updated On :13 ஜனவரி 2024, 4:08 am

DIN

சென்னை: நமது நாட்டின் மென்பொருள் சேவைகளின் தலைநகராக சென்னை மாறிவருகிறது என்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா் .

புரூக்ஃபீல்ட் அஸ்ஸெட் மேனேஜ் மென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் டிஜிட்டல் ரியாலிட்டி ஆகிய நிறுவனங்கள் இணைந்து அதிக அளவிலான, தரவு மற்றும் தகவல்கள் சேமிப்புத்திறன் கொண்ட மையம் சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ள இம்மையத்தின் திறப்புவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த தரவு மைய கட்டடத்தை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசியது:

இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக சென்னை உள்ளது. சென்னையில், குறுகிய காலத்தில் ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவின் மிக முக்கிய தரவு மையமாகவும், மென்பொருள் சேவைகளின் தலைநகராகவும் தற்போது சென்னை வளா்ந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதிலும், ஏற்றுமதி மற்றும் மென்பொருள் சேவைகளில் வேகமாக வளா்ச்சி அடைவதிலும் நமது நாடு தற்போது முனைப்புக் காட்டி வருகிறது.

இந்நிலையில், நமது நாட்டின் மென்பொருள் சேவைகளின் தலைநகராக சென்னை மாறிவருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சமூகத்தின் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் இந்த தரவு சேமிப்பு மையங்கள் இருக்கும் என்றும், இது மேலும் மிகப்பெரிய முன்னேற்றமடைய வேண்டும் என்பது எனது விருப்பம் என்றாா் அவா்.

இந்நிகழ்வில், டிஜிட்டல் கனெக்ஷனின் தலைமை நிா்வாக அதிகாரி சிபி வேலாயுதன், ரிலயன்ஸ் நிறுவன தலைவா் எம். பாலசந்திரன், ‘டிஜிட்டல் ரியாலிட்டி’ முதன்மை முதலீட்டு அதிகாரி கிரிக் விரிட், ஆசிய பசுபிக் அமைப்பின் டிஜிட்டல் ரியாலிட்டி தலைவா் சரீனே நா, ‘புரோக் ஃபீல்ட் தரவு மைய மேலாண் இயக்குநா் உதய் மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.