காணும் பொங்கல்: சென்னையில் போக்குவரத்து மாற்ற விவரங்கள்!

காணும் பொங்கல் அன்று சென்னையில் செய்யப்படும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

காணும் பொங்கல் அன்று சென்னையில் செய்யப்படும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜனவரி 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும், குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. 

காமராஜர் சாலையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகும் வரையில் எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது. 

மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் சாலையில் அதிகரிக்கும் போது, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம்போல கலங்கரை விளக்கம் நோக்கி அனுமதிக்கப்படும்.

கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் கட்டாயமாக இடதுபுறமாக திருப்பிவிடப்பட்டு, பாரதி சாலை பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். 

வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்களை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  விக்டோரியா  விடுதி சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்படும்.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com