காலி மதுபாட்டிலுக்கு 10 ரூபாய்: ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும்

ஒரு மாவட்டத்தில் மட்டும் அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டிலை திருப்பி கொடுத்தால் ரூ.10 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி மதுபாட்டிலுக்கு 10 ரூபாய்: ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும்


கம்பம்: வெள்ளிக்கிழமை முதல் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டிலை திருப்பி கொடுத்தால் ரூ.10 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஏராளமான அரசு மதுபான கடைகள் உள்ளன. இங்கு தற்போது மதுபான கூடங்கள் ஏலம் விடப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின் இயங்கி வருகிறது. இந்த நிலையில் பசுமை மாவட்டமாக தேனி மாவட்டம் அறிவிக்கப்பட்டது. 

இதனால் மதுபான பாட்டில்களால் வயல்வெளி, ஆறு,  வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் மாசு ஏற்படாமலிருக்க அரசு மதுபான கடைகளில் மதுபாட்டிலை வாங்கி காலி பாட்டிலை திரும்பக் கொடுத்தால் ரூ.10 அந்த நுகர்வோருக்கு வழங்க அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, தேனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. மதுப்பிரியர்கள் பாட்டில்களை திரும்ப கொடுத்து 10 ரூபாயை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com