ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தார் மோடி; கார் கதவை திறந்து, நின்றபடி பயணம்

திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தார் மோடி; கார் கதவை திறந்து, நின்றபடி பயணம்

திருச்சி: திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்று கொள்ளிடம் அருகே தரையிறங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்றார்.

கோயிலுக்குச் செல்லும் வழி நெடுகிலும் தன்னைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்துக்கிடப்பதைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, கார் கதவை திறந்து நின்றபடி பயணித்து, தொண்டர்களுக்கு கையசைத்து நன்றி கூறினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் செல்லும் வழிநெடுகிலும் பாஜகவினர் அணிவகுத்து நின்று வரவேற்பு அளித்தனர். இதனால், அனைவரையும் காண வேண்டும் என்ற அவலில், காரின் கதவை திறந்து நின்றபடி சென்ற பரிதமர் மோடி தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி சென்றார்.

ரங்கநாதர் கோயிலில், ரங்கா ரங்கா கோபுரத்துக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com