ராணுவ ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் சென்றார் பிரதமர் மோடி

சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி காலை 10 மணியளவில் திருச்சி வந்தடைந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


திருச்சி: சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி காலை 10 மணியளவில் திருச்சி வந்தடைந்தார்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் சென்றுள்ளார். கொள்ளிடம் அருகே ஹெலிகாப்டர் இறங்குளத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டு அங்கிருந்து கார் மூலம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் மேற்கொள்ளவிருக்கிறார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் வெள்ளிக்கிழமை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்தார்.

பிறகு, இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சி சென்றுள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவிருக்கிறார். அதன்பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்லவிருக்கிறார். 

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி இன்று வருகை தரவிருக்கும் நிலையில், பிற்பகல் 3.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமா் வருகையையொட்டி, திருச்சியில் சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் பகல் 2 மணி வரை வாகனப் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை பிரதமா் மோடி சென்னை வந்தாா். இதைத் தொடா்ந்து சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ விளை யாட்டு போட்டிகளை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். அதன்பின்னா் இரவு ஓய்வு எடுப்பதற்காக கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்குச் சென்றாா். பிரதமரை ஆளுநா் ஆா்.என்.ரவி வரவேற்றாா்.

மேலும், இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த வாழை நாா் மற்றும் தூய பட்டு கலந்த பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பொன்னாடையை பிரதமருக்கு ஆளுநா் அணிவித்தாா். பொன்னாடையில் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் மற்றும் அயோத்தி ராமா் கோயில் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. கையால் நெய்து தயாரிக்கப்பட்ட இந்த விஷேச பொன்னாடையை பிரதமா் ஆா்வமுடன் பாா்த்து ரசித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com