ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

திருவண்ணாமலை கிரிவலம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஜன. 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னை-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :23 ஜனவரி 2024, 12:10 pm

திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

பக்தர்களின் வசதிக்காக ஜன. 24 மற்றும் ஜன. 25 ஆகிய நாள்களில் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம் - திருவண்ணாமலை, புதுச்சேரி - திருவண்ணாமலை, கடலூர்/பண்ருட்டி, திருக்கோவிலுர், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை, வேலூர் - திருவண்ணாமலை, திருப்பத்தூர் - திருவண்ணாமலை, ஆரணி/ஆற்காடு - திருவண்ணாமலை, காஞ்சிபுரம் - திருவண்ணாமலை வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குடியரசு நாள், தைப்பூசம் என தொடர் விடுமுறை நாள்கள் வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.