சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் எப்படி இருக்கிறது சொகுசு அறை?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 6வது  நடை மேடையில் அமைக்கப்பட்டிருக்கும் சொகுசு அறை திறந்து பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் எப்படி இருக்கிறது சொகுசு அறை?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 6வது  நடை மேடையில் அமைக்கப்பட்டிருக்கும் சொகுசு அறை திறந்து பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று உயா்தரகாத்திருப்போா் அறை புதிதாக திறக்கப்பட்டது. இது நவீன வசதிகளுடன் மிகப் பிரமாண்டமாக  அமைந்திருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் தேநீர், காபி போன்றவை இலவசமாக அருந்தலாம்.  மேலும் மூணு மணி நேரம்  ஒரு நபர் தங்க  840 ரூபாயும், சிறுவர்களுக்கு இலவசம் எனவும் கூறப்படுகிறது.

இதில் முக்கிய அம்சமாக குறுகிய காலம் தங்கிச் செல்லும் இந்த சொகுசு அறைகள், காத்திருப்போர் அறை மிகவும் அருமையாக வைத்துள்ளதாகவும் ரயிலில் பயணம் செய்பவர்களின் தகவல் அறிய தொலைக்காட்சியையும் படுக்கை அறைக்கு மின்சார வசதிகளையும் மற்றும் இந்த அறையில் இலவச வைஃபை வசதியும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படுக்கையறைகள் மற்றும் அமரும் இடங்கள் என  காத்திருப்போர் அறை அமைந்துள்ளதாகவும், வரக்கூடிய ரயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காத்திருப்போர் அறை குறித்து நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் குறுகிய காலம் தங்கி செல்லும் பயணிகளின் வசதிக்காக உயா்தர காத்திருப்போா் அறை திறக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் பிரதான வாயிலின் நடைமேடை 6 அருகே அமைந்துள்ள இந்த அறை விமான நிலையத்துக்கு இணையான அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது. இதை பராமரிக்க ‘டென் 11 ஹாஸ்பிட்டாலிட்டி’ எனும் நிறுவனத்துடன் 5 ஆண்டுக்கு ரூ.17.75 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அறையில் சுமாா் 180 போ் தங்கும் வகையில் சொகுசு இருக்கை, படுக்கை வசதி உள்ளன. சைவ, அசைவ உணவகங்கள், சிற்றுண்டி கடை, உடமைகளை வைக்க பிரத்யேக வசதி, கழிவறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்த அறையில் ஒரு மணி நேரம் தங்குவதற்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படும். இதில் பயணிகளுக்கு இலவச வைஃபை, டீ, காபி உள்ளிட்டவை வழங்கப்படும். படுக்கை வசதி கொண்ட அறையில் 3 மணிநேரம் தங்குவதற்கு ஒரு நபருக்கு ரூ.840 கட்டணம் வசூலிக்கப்படும். இதில் பயணிகளுக்கு தண்ணீா் பாட்டில், குளிா்பானம், வைஃபை உள்ளிட்டவை வழங்கப்படும். பயணிகள் கூடுதலாக தங்கும் காலத்தை பொறுத்து கட்டணங்கள் மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com