தேவி விருதுகள் விழா தொடக்கம்!

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்கள் தேர்வு செய்யப்பட்டு தேவி விருதுகள் வழங்கப்படுகின்றன.
தேவி விருதுகள் விழா தொடக்கம்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 2024ஆம் ஆண்டுக்கான தேவி விருதுகள் விழா சென்னையில் இன்று (ஜன. 25) தொடங்கியது.

சென்னை கிண்டியிலுள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தேவி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்கள் தேர்வு செய்யப்பட்டு தேவி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு 11 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருது வழங்கப்படுகிறது. 

இந்த விழாவை தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி மேனன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சாந்த்வானா பட்டாச்சார்யா ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.

விருது பெறுபவர்கள்:

பாடகர் அருணா சாய்ராம், தொழிலதிபர் காவியா மாறன், மருத்துவ விஞ்ஞானி பிரியா ஆப்ரகாம், வானியற்பியலாளர் அன்னபூரணி சுப்ரமணியம், எழுத்தாளர் சரண்யா மணிவண்ணன், எழுத்தாளர் ஷோபா விஸ்வநாத், கட்டடவியல் துறையை சேர்ந்த திரிபுரசுந்தரி செவ்வல், வானவியலாளர் முனைவர் ஸ்ரீமதி கேசன், ஆடை வடிவமைப்பாளர் உமா பிரஜாபதி, விசாலாட்சி ராமசாமி, சூழலியல் ஆர்வலர் அர்ச்சனா ஆகியோர் விருது பெறவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com