பண்டைய காலம் முதலே கல்வியின் மையமாகத் திகழும் தமிழகம்: தர்மேந்திர பிரதான்

பண்டைய காலம் முதலே கல்வியின் மையமாக தமிழ்நாடு திகழ்வதாக மத்திய கல்வித் துறை  அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

சென்னை: பண்டைய காலம் முதலே கல்வியின் மையமாக தமிழ்நாடு திகழ்வதாக மத்திய கல்வித் துறை  அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் கல்விச் சிந்தனை அரங்கு இன்று(ஜன.25) இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கின் இரண்டாம் நாளில் காணொலி வாயிலாக பங்கேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அமைச்சர், “பண்டைய காலம்முதல் கல்வியின் மையமாகத் திகழும் தமிழ்நாட்டில் இந்த கல்விச் சிந்தனை அரங்கு நடைபெறுவதில் மகிழ்ச்சி.

பனராஸில் காசி தமிழ்ச் சங்க தொடக்க விழாவின்போது, உலகிலேயே மிகப் பழமையான மொழியாக தமிழ் இருப்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கை 2020-ல் அனைத்து இந்திய மொழிகளும் ஊக்குவிக்கப்படுகிறது. உயர்கல்வி பாடப் புத்தகங்கள் தாய் மொழிகளில் இருப்பதை உறுதி செய்கிறது.
” என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com