தென்காசி மாவட்ட சாலை விபத்தில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் தலா ரூ.2 லட்சம் அறிவிப்பு

மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானார்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)

சென்னை: தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானார்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்காசி கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரத்தில் உள்ள பெரியபாலம் அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை(ஜன.28) அதிகாலை சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், புளியங்குடி கிராமம், பகவதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த போத்திராஜ் (32),வேல்மனோஜ் (30), சுப்பிரமணியன் (29),கார்த்திக் ( 24),முத்தமிழ்செல்வன் (23), மனோ(19) ஆகிய 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com