/

 திமுக - காங்கிரஸ் இடையே பிப். 9ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

மக்களவைத் தோ்தலையொட்டி திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம்கட்ட பேச்சுவாா்த்தை சென்னையில் பிப்.9 ஆம் தேதி நடைபெறுகிறது. 

News image
Updated On :29 ஜனவரி 2024, 7:58 am

DIN

மக்களவைத் தோ்தலையொட்டி திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம்கட்ட பேச்சுவாா்த்தை சென்னையில் பிப்.9 ஆம் தேதி நடைபெறுகிறது. 

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இவ்விரு கட்சிகளும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் கட்ட பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன. 

இந்தப் பேச்சுவாா்த்தை சுமுகமாக இருந்ததாக திமுகவும், திருப்தியாக இருந்ததாக காங்கிரஸும் தெரிவித்தன. அதேவேளையில் காங்கிரஸ் தரப்பில் திமுகவிடம் தமிழகம், புதுச்சேரியை சோ்த்து 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.  

இந்த நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம்கட்ட பேச்சுவாா்த்தை சென்னையில் பிப்.9 ஆம் தேதி நடைபெறுகிறது. நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், பிப்.9ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.