
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பிப்ரவரி 1 முதல் மாதாந்திர பயணச் சீட்டு விற்பனை மையம் தொடக்கப்படுகிறது.
சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் பிப்ரவரி 1 முதல் மாதாந்திர பயணச் சீட்டு விநியோகிக்கப்பட உள்ளது.
அதன்படி, விருப்பம்போல் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.1000 பயண அட்டை, மாதாந்திர பயண சலுகை அட்டையையும் பெறலாம். மாணவர்களுக்கு 50 சதவீத சலுகைக்கான பயண அட்டையும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையுடன் 10 எண்ணிக்கை கொண்ட டோக்கனும் வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.