
திருநெல்வேலி, சென்னை, மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை(ஜூலை 2) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலியிலிருந்து சென்னை வரை வாரந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் திருநெல்வேலி - சென்னை வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 06070), ஜூலை 4 முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எதிர்வழித்தடத்தில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் சென்னை - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 06069), ஜூலை 5 முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையம் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 06030), ஜூலை 7 முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எதிர்வழித்தடத்தில், வாரந்தோறும் திங்கள்கிழமை மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 06029), ஜூலை 8 முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.