தமிழ்நாடு
இடைத் தோ்தல்: கருத்துக் கணிப்புகளை எப்போது வெளியிடலாம்?
வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்புகள்: தேர்தல் துறை விளக்கம்
விக்கிரவாண்டி இடைத் தோ்தலில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை எப்போது வெளியிடலாம் என்று தமிழக தோ்தல் துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து, அந்தத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விக்கிரவாண்டி இடைத் தோ்தல் வாக்குப் பதிவு ஜூலை 10-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு, 6.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தலாம். வாக்குப் பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, எந்தக் கருத்துக் கணிப்புகளையும், பிற வாக்குப் பதிவு ஆய்வு முடிவுகளையும் வெளியிடக் கூடாது. இது அச்சு ஊடகம், காட்சி மற்றும் இதர அனைத்து மின்னணு ஊடகங்களுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.