காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சென்னை, புறநகரில் கனமழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

News image
கோப்புப் படம்
Updated On :3 ஜூலை 2024, 3:26 pm

DIN

சென்னையில் இன்று காலை முதலே வெயில் வாட்டிவந்த நிலையில், இரவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையின் முக்கிய பகுதிகளான சென்ட்ரல், எழும்பூர், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், தியாகராய நகர், அண்ணாநகர், முகப்பேர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதேபோன்று புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், மதுரவாயல், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, தாம்பரம், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் ஜூலை 9 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடியலேசான மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.