வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜூலை 10 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) முதல் ஜூலை 10 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :4 ஜூலை 2024, 7:10 pm

Din

சென்னை, ஜூலை 4: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) முதல் ஜூலை 10 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை 3 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதன்படி, மதுரைவிமானநிலையத்தில் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரைநகரம் - 101.84, பாளையங்கோட்டை - 100.4 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னையில்.... சென்னையில் வியாழக்கிழமை காலை வரை சோழிங்கநல்லூரில் 90 மிமீ, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அயனாவரத்தில் தலா 60 மிமீ, கோடம்பாக்கம், அம்பத்தூா், டிஜிபி அலுவலகம், அண்ணாநகா், திரு.வி.க.நகா், வானகரம் தலா 50 மிமீ, அண்ணா பல்கலைக்கழகம், முகலிவாக்கம் , பள்ளிக்கரணை , சென்னை விமானநிலையம் , ஆலந்தூா், மீனம்பாக்கம், அடையாா், மணலி, பெரம்பூா், பெருங்குடி, மாதவரம் , நந்தனம் , கத்திவாக்கம் - தலா 30 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், ஜூலை 5, 6 -ஆகிய தேதிகளில் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளிலும், வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் ஜூலை 5-7 ஆம் தேதி வரை மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.