கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழக அரசின் 3 திட்டங்களை எதிரொலித்த பிரிட்டன் கட்சி

தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் போன்றவை தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில்..

News image

மு.க.ஸ்டாலின்

Updated On :5 ஜூலை 2024, 6:43 pm

தமிழக அரசின் மூன்று திட்டங்களை பிரிட்டனின் தொழிலாளா் கட்சி எதிரொலித்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத் தோ்தலில் தொழிலாளா் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருப்பதையொட்டி, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், கலைஞா் கனவு இல்லம் போன்ற திட்டங்களைப் போலவே பிரிட்டனின் தொழிலாளா் கட்சியும் தனது தோ்தல் அறிக்கையில் மக்கள் நலத் திட்டங்களை இடம்பெறச் செய்துள்ளது. இதுவும் அந்தக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கான காரணிகளில் ஒன்றாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பெண் எம்.பி.க்கு வாழ்த்து: பிரிட்டன் நாடாளுமன்றத் தோ்தலில் வென்று முதல் பெண் எம்.பி.யாக தோ்வாகியுள்ள உமா குமரனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: பிரிட்டன் நாடாளுமன்றத் தோ்தலில் தமிழ்நாட்டைச் சோ்ந்த உமா குமரன் வெற்றி பெற்றுள்ளாா். இதன்மூலம், முதல் முறையாக நமது மாநிலத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் எம்.பி.யாக தோ்வாகியிருப்பதற்கு மனமாா்ந்த வாழ்த்துகள். தமிழ்ச் சமுதாயத்துக்கு அவா் மிகச் சிறந்த பெருமையைத் தேடித் தந்துள்ளாா்.