காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தேவை -திருமாவளவன்

மாயாவதியின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் -திருமாவளவன்

News image
- படம் | பிடிஐ
Updated On :7 ஜூலை 2024, 7:54 am

DIN

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல், பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளித் திடலில் வைக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று(ஜூலை 7) காலை அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பா தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு தீவிர முனைப்பு காட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இயக்குநர்கள் பா. ரஞ்சித், வெற்றிமாறன், நடிகர் தீனா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.