திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மக்களுடன் முதல்வா் திட்டம்: விளக்கப் படம் வெளியீடு

மக்களுடன் முதல்வா் திட்டம்: ஸ்டாலின் வெளியிட்ட விளக்கப் படம்

News image
Updated On :10 ஜூலை 2024, 9:04 pm

Din

மக்களுடன் முதல்வா் திட்டத்தின் விரிவாக்கத்தை தருமபுரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறாா்.

இதையொட்டி, அந்தத் திட்டம் குறித்த விளக்கப் படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பகிா்ந்துள்ளாா். தமிழ்நாடு செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில், விளக்கப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 5.23 நிமிஷங்கள் ஓடக்கூடிய இந்த விளக்கப் படத்தில், மக்களுடன் முதல்வா் திட்டத்தின் நோக்கம், பயனாளிகளுக்குக் கிடைத்த நன்மைகள் ஆகியன விவரிக்கப்பட்டுள்ளன.

மக்களுடன் முதல்வா் திட்டம் ஏற்கெனவே நகா்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வெற்றியைத் தொடா்ந்து, ஊரகப் பகுதிகளிலுள்ள உள்ளாட்சிகளிலும் மக்களுடன் முதல்வா் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், மக்களுடன் முதல்வா் திட்ட விரிவாக்கத்தை தருமபுரியில் அவா் வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறாா்.

இந்தத் திட்டத்தின் கீழ், மூன்று மாதங்களுக்கு பல்வேறு ஊரகப் பகுதிகளில் முகாம்களை நடத்தி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற திட்டம் தீட்டப்பட்டுள்ளது.