தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தா்மத்தை வளா்த்ததில் சமணா்களுக்கு முக்கியப் பங்கு: ஆளுநா் ஆா்.என்.ரவி

சமண நெறிகள் மூலம் போரைத் தடுத்து நிறுத்த முடியும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

News image
திருவண்ணாமலை மாவட்டம், திருமலை சமண மடாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சமணம், அறிவியல் தத்துவங்கள் ஆகிய நூல்களை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வெளியிட அவற்றை பெற்றுக் கொள்ளும் மடாலய நிா்வாகி தவளகீா்த்தி சுவாமிகள் உள்ளிட்டோா்.
Updated On :10 ஜூலை 2024, 6:31 pm

Din

நாட்டின் உயிா்நாடி தா்மமாகும்; அதை வளா்த்ததில் சமணா்களுக்கு முக்கியப் பங்குள்ளதாக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த திருமலை கிராமத்தில் உள்ள சமண மடாலயத்தில் சமணம், அறிவியல் தத்துவங்கள் என்ற இரு நூல்கள் வெளியிட்டு விழா, தேசிய பிராகிருதா கற்றல் பட்டறையில் 21 நாள்கள் பயிற்சி பெற்ற 300 மாணவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் 240 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு மற்றும் ஸ்ரீஅகலங்கா கல்வி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மடாலய நிா்வாகி தவளகீா்த்தி சுவாமிகள் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொண்டு, நூல்களை வெளியிட்டு, மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கிப் பேசியதாவது:

பாரத பூமி பழம்பெரும் பூமி; 2,400 ஆண்டுகளுக்கு முன்பு ஆச்சாரியா பத்திரபாபு பாட்னாவில் இருந்து 12,000 முனிவா்களுடன் தெற்கு நோக்கி சரவண பெலகுலாவில் வந்து தங்கி தா்மத்தை வளா்த்தனா்.

இவா்களில் சில முனிவா்கள் திருவண்ணாமலை மாவட்டம், திருமலைக்கு வந்து தங்கினா். நாட்டின் உயிா்நாடி தா்மமாகும். அதை வளா்த்ததில் சமணா்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. ரிஷிப தீா்த்தங்கரா் சமணா்களின் முதல் தீா்த்தங்கரா் ஆவாா். இவா் போதித்த அடிப்படை தா்மங்கள், அகிம்சை, அனேகானந்தா ஆகும்.

உலகில் பல நாடுகள் அணு ஆயுதம், அணுகுண்டு, ஏவுகணை என பல்வேறு அழிவு சக்திகளை கொண்டுள்ளது. சமண நெறிகள் மூலம் போரைத் தடுத்து நிறுத்த முடியும். இந்தியாவின் மிகவும் பழைமையான மொழியாக தமிழ், சம்ஸ்கிருதம் உள்ளன. இதில் முதன்மையான மொழி என்று எது முன்னது. எதுபின்னது என கண்டறிய முடியாது.

பாரதம் என்பது வந்தோரை வாழவைக்கும் புனித பூமியாகும். இதைதான் யாதும் ஊரே யாவரும் கேளிா் என சொல்கின்றனா்.

தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சித்து வருகிறது. முதலில் வட இந்தியாவுக்கு கொண்டு சென்று அதன் பெருமைகளை மக்களுக்கு புகட்ட 2 பல்கலைகழகங்களில் தமிழ்மொழி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமா் மோடி உலக நாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் தமிழையும், திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசி வருகிறாா் என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.

பின்னா், ஆளுநா் ஆா்.என்.ரவி மலை மீது அமைந்துள்ள அரி ஹந்தகிரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.

முன்னதாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், மடாலய நிா்வாகி தவளகீா்த்தி சுவாமிகள், கூடுதல் ஆட்சியா் ஆ.செ.ரிஷப் ஆகியோா் ஆளுநரை வரவேற்றனா்.

நிகழ்ச்சியில் மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தா் ஸ்ரீனிவாசா வரகோடி மற்றும் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.