கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

புதுக்கோட்டை: பிரபல ரௌடி என்கவுண்டர்

ரௌடி துரைசாமியின் மீது சுமார் 70 வழக்குகள் நிலுவையில் உள்ளன

என்கவுண்டர் செய்யப்பட்ட ரௌடி துரைசாமி

Updated On :

புதுக்கோட்டையில் பிரபல ரௌடி துரைசாமி என்கவுண்டர் செய்யப்பட்டார்.

திருச்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பிரபல ரௌடி துரைசாமி, புதுக்கோடையின் திருவரங்குளம் வம்பன் தைலமரக் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினர் துரைசாமி பிடிக்கச் சென்றிருந்தனர்.

காவல்துறையினர் துரைசாமியை சுற்றிவளைக்க முயன்றபோது, காவல் அதிகாரி ஒருவரை துரைசாமி அரிவாளால் வெட்ட முயன்றதில், காவல் அதிகாரி காயமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற துரைசாமி காலில் காவல் ஆய்வாளர் முத்தையா துப்பாக்கியால் சுட்டார். இருப்பினும், துரைசாமி தப்பிக்க முயன்றதால், மார்பில் சுடப்பட்டு உயிரிழந்தார்.

இதனையடுத்து, துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிரபல ரௌடி துரைசாமியின் மீது 4 கொலை வழக்குகள் மற்றும் ஏராளமான திருட்டு வழக்குகள் என 74 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தான், 2022ல் உயிரிழந்த பிரபல ரௌடி இளவரசன் கொலை வழக்கில் முதல் குற்றவாளி எனக் கூறுகின்றனர். 2023ஆம் ஆண்டில் திருட்டு வழக்கிற்காக நீதிமன்றம் அழைத்துச் சென்றபோது ஆய்வாளர் உள்பட 5 காவலர்களைத் தாக்கிவிட்டு, தப்பிச் சென்றுள்ளார். இருப்பினும், காவல்துறையினர் துரையின் காலில் சுட்டதில் காயமடைந்து, சிகிச்சை பெற்று திரும்பியிருந்தார்.

சமீபத்தில் காவல் ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.