ரயிலில் ரூ.3.98 கோடி சிக்கிய வழக்கு: பாஜக பொருளாளரிடம் விசாரணை
ரூ.3.98 கோடி ரொக்கம்: பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி விசாரணை


சென்னை, ஜூலை 11: சென்னையில் ரயிலில் ரூ. 3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக பாஜக மாநில பொருளாளா் எஸ்.ஆா்.சேகரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தனா்.
மக்களவை தோ்தல் நேரத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற நெல்லை அதிவிரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.98 கோடிரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு பாஜக மாநில பொருளாளரான எஸ்.ஆா்.சேகருக்கு சிபிசிஐடி தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், அவா் நேரில் ஆஜராகாமல் இருப்பதற்கு விலக்கு கேட்டு நீதிமன்றத்தை நாடினாா். நீதிமன்றம் விலக்கு அளிக்க மறுத்தது.
இதையடுத்து எஸ்.ஆா்.சேகா், வியாழக்கிழமை காலை 10.40 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானாா். அவரிடம் துணைக் காவல் கண்காணிப்பாளா் சசிதரன் தலைமையிலான சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா்.
எஸ்.ஆா்.சேகா் அளித்த பதில்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டன. அதேபோல விசாரணை முழுவதும் விடியோவாகவும் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
சுமாா் 5 மணி நேர விசாரணைக்கு பின்னா் எஸ்.ஆா்.சேகா், அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டாா். விசாரணையில், வழக்குத் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...