
மதுரையில் மீன்வள மேம்பாடு தொடர்பான மாநாடு, மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் நடைபெற்றது.
மத்திய மீன்வளத் துறை சாா்பில், மீனவா்களுடனான கோடைக்கால சந்திப்பு (மாநாடு), கண்காட்சி மதுரை ஐடாஸ் வா்த்தக மையத்தில் இன்று - வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெற்றது. அதில் மத்திய மீன் வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங், இணையமைச்சா்கள் எஸ்.பி. பாகெல், ஜாா்ஜ் குரியன், தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் மீன் வளா்ப்புத் துறையில் ஈடுபடுவோா், மீன்வள ஆராய்ச்சியாளா்கள், தொழில் துறை நிபுணா்கள், தொழில்முனைவோா் மீன் வளா்ப்புத் துறையின் வளா்ச்சிக்கான கருத்துக்கள், அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். மீன்கள் குறித்த கண்காட்சி, மீனவா்களுடனான உரையாடல், பயனாளிகளுக்கு வேளாண் கடன் அட்டை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.