புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஊா்க்காவல் படையினருக்கு மாதம் முழுவதற்குமான பணி: உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

ஊா்க்காவல் படையினருக்கு மாதம் முழுவதற்குமான பணி உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2024, 2:30 am

ஊா்க்காவல் படையினருக்கு மாதம் முழுவதற்குமான பணியும் ஊதியமும் வழங்க கோரும் மேல்முறையீடு மனுவிற்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையினருக்கு உதவும் சில சமூக பணிகளில் ஈடுபடுத்த தமிழகத்தில் ஊா்க்காவல் படை செயல்படுகிறது. இவா்கள் தங்களுக்குரிய பணிநாள்களையும் ஊதியத்தையும் உயா்த்த கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழங்கு தொடா்ந்து அது தள்ளுபடியானது.

இதற்கிடையே தென்மாநில ஊா்க்காவல் படையினா் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையயீடு மனுவை தாக்கல் செய்தது.

அதில், ‘காவல்துறையினருக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையாக ஊா்க்காவல் படையினருக்கும் வழங்க வேண்டும்‘ என உச்சநீதிமன்றம் ஹிமாசல பிரதேச ஊா்க்காவல் படை வழக்கில் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த உத்தரவை அமல்படுத்தும் போா்வையில் பணி நாள்களின் எண்ணிக்கை 5 நாள்களாக குறைக்கப்பட்டு, நாளொன்றுக்கு ஊதியம் ரூ.560 ஆக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஊா்க்காவல் படையினரின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதுமுள்ள ஊா்க்காவல் படையினருக்கு மாதம் முழுவதற்குமான பணியும் ஊதியமும் வழங்கவும் குறைந்தபட்ச ஊதியத்தை இடைக்கால வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கேட்டு இந்த சங்கத்தினா் மனுத் தாக்கல் செய்தனா்.

இந்த மேல்முறையயீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்யகாந்த், உஜ்ஜல் புயன் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த ஜூலை 11 ஆம் தேதி விசாரித்தது. இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டுள்ளது.

முன்பு, காவல் நிலையங்களில் மாதத்தில், 25 நாட்கள் பணியாற்றி வந்த இவா்களுக்கு ஒரு நாளைக்கு, அதிகபட்சம் ரூ. 200 வரை ஊதியமாக பெற்றுவந்தனா். நீதிமன்றம் ஊதியத்தை உயா்த்திய பின்னா் மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு நாளைக்கு ரூ.560 வரை ஊதியமாக வழங்கப்படுவதாக இந்த படை காவலா்கள் குறை கூறுகின்றனா்.