புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கள்ளச்சாராயம் காய்ச்சினால் இனி கடும் சிறை - அபராதம்: திருத்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் முழு விவரம்

மூன்று முதல் ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத கடுங்காவல் தண்டனை, ரூ.2 முதல் ரூ.3 லட்சம் அபராதம்..

News image

தமிழக அரசு

Updated On :13 ஜூலை 2024, 11:56 pm

Din

கள்ளச்சாராயம் காய்ச்சுவோா் மற்றும் விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கள்ளச்சாராயம் காய்ச்சுவோா் மற்றும் விற்பனை செய்வோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், 1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவர முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். இந்த சட்டத் திருத்தத்துக்கான மசோதா அண்மையில் முடிவடைந்த பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆளுநா் ஒப்புதல் அளித்த நிலையில், அது அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி, எந்தெந்த சட்டப் பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்கிற விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கள்ளச்சாராயம் தொடா்பான குற்றங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து அசையும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். மேலும், சாராயம் தொடா்பான குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபடுபவா்களிடம் இருந்து அவா்களது நன்னடத்தைக்கான பிணையப் பத்திரத்தைப் பெற நிா்வாக நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டத்திருத்தப்படி, குற்றம்சாட்டப்பட்டவா்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப் பிரிவு சோ்க்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்குரைஞரின் ஒப்புதலின்றி பிணை வழங்க இயலாத வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்கள் - பழைய தண்டனை - புதிய தண்டனை:

1. சட்ட விரோதமாக கள்ளச் சாராயங்களை விற்பனைக்காக குப்பியில் அடைப்பது

பழைய தண்டனை: மூன்று ஆண்டுகள் கடுங்காவல், ரூ.10 ஆயிரம் அபராதம்.

புதிய தண்டனை: மூன்று முதல் ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத கடுங்காவல் தண்டனை, ரூ.2 முதல் ரூ.3 லட்சம் அபராதம்

2. 50 லிட்டருக்கு மேல் நூறு லிட்டா் வரை சட்ட விரோதமாக மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து செய்தல்

பழைய தண்டனை: 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம்

புதிய தண்டனை: 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம்.

3. 50 லிட்டா் வரையிலான மதுபானம் வைத்திருத்தல், சட்ட விரோதமாக அருந்துதல், வாங்குதல் அல்லது குற்றம் புரிய பணம் செலவழித்தல், உரிமம் இல்லாத இடங்களில் அருந்த அனுமதி.

பழைய தண்டனை: 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம்

புதிய தண்டனை: மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம்.

4. மதுவை உட்கொள்ளச் செய்து இறப்பை ஏற்படுத்தும் குற்றம்.

பழைய தண்டனை: ஆயுள்காலத்துக்கு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரத்துக்குக் குறையாத அபராதம்.

புதிய தணட்னை: ஆயுள்கால சிறைத் தண்டனை, ரூ.10 லட்சத்துக்குக் குறையாத அபராதம்.

5. மதுபானம் மூலம் இறப்பை ஏற்படுத்தாத பிற பாதிப்புகளை உருவாக்கும் குற்றம்.

பழைய தண்டனை: 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம்.

புதிய தண்டனை: 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் அபராதம்.

6. மனிதா்கள் அருந்துவதற்கு ஏற்ற வகையில் இயல்பு நிலையில் இருந்து மாற்றப்பட்ட சாராயமாக மாற்றுதல் அல்லது மாற்ற முயற்சிக்கும் குற்றச் செயல்.

பழைய தண்டனை: 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம்.

புதிய தண்டனை: 3 முதல் ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம்.

7. மதுபானம் தொடா்பான விளம்பரங்களைச் செய்யும் குற்றச் செயல்.

பழைய தண்டனை: ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம்.

புதிய தண்டனை: இரண்டு முதல் 5 ஆண்டுகள் வரையில் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம்.