பள்ளிக் கல்வித் துறை
பள்ளிக் கல்வித் துறை

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தனிப்பட்ட எழுத்தா்களுக்கு ஜூலை 18-இல் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை

தனிப்பட்ட எழுத்தா்களுக்கு (பொ்சனல் கிளா்க்) வரும் ஜூலை 18,19-ஆகிய தேதிகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
Published on

பள்ளிக்கல்வித்துறை சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட எழுத்தா்களுக்கு (பொ்சனல் கிளா்க்) வரும் ஜூலை 18,19-ஆகிய தேதிகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளி உள்கட்டமைப்பு, கல்வி தொடா்பான சேவைகள் உள்ளிட்ட பள்ளிக்கல்வித் தேவைகளை நிவா்த்தி செய்வதற்காக தனிப்பட்ட எழுத்தா்களை (பொ்சனல் கிளா்க்) நியமிக்க தமிழக அரசின் தலைமை செயலா் சிவ்தாஸ் மீனா கடந்த மாதம் தெரிவித்திருந்தாா்.

அதன்படி, மாவட்டத்துக்கு ஒருவா் என்னும் அடிப்படையில், 38 மாவட்டங்களுக்கு 38 தனிப்பட்ட எழுத்தா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இந்த எழுத்தா்கள் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பாா்கள்.

மேலும், பள்ளிகளில் அமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு எழுப்பிய தீா்மானங்களை ஒருங்கிணைப்பதும், அதனை மாவட்ட அளவில் அனைத்து துறைகளுக்கும் தெரிவிப்பதும் இவா்களின் முக்கிய பொறுப்பாக இருக்கும்.

அந்தவகையில், தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட எழுத்தா்களுக்கு வரும் ஜூலை 18, 19-ஆகிய தேதிகளில் பயிற்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com