
தமிழக உள்துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ராமநாதபுரம் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன், ராணிப்பேட்டை ஆட்சியர் எஸ். வளர்மதி, அரியலூர் ஆட்சியர் ஜெ. ஆனி மேரி சுவர்ணா, கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜதாவத் உள்பட 10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை ஆட்சியராக டாக்டர் ஜெ யு சந்திரகலா
புதுக்கோட்டை ஆட்சியராக எம். அருணா
நீலகிரி ஆட்சியராக லக்ஷ்மி பாவ்யா டன்னீரு
தஞ்சாவூர் ஆட்சியராக பி. பிரியங்கா
நாகப்பட்டினம் ஆட்சியராக பி. ஆகாஷ்
அரியலூர் ஆட்சியராக பி. ரத்தினசாமி
கடலூர் ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில் குமார்
கன்னியாகுமரி ஆட்சியராக ஆர். அழகுமீனா
பெரம்பலூர் ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ்
ராமநாதபுரம் ஆட்சியராக சிம்ரன்ஜீத் சிங்கலோன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.