கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

லோக் ஆயுக்த தலைவா் யாா்?: தமிழக அரசு இன்று ஆலோசனை

தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைப்பின் தலைவா் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2024, 1:27 am

Din

சென்னை: தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைப்பின் தலைவா், இரண்டு உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு லோக் ஆயுக்த அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் பொறுப்பு வகித்தாா். அவா் தனது பதவியை கடந்த ஏப். 20-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, லோக் ஆயுக்த அமைப்பின் தலைவா் மற்றும் நீதித் துறை சாராத இரண்டு உறுப்பினா்களை நியமனம் செய்வதற்கான தெரிவுக் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையிலான இந்தக் குழுவிடம் தகுதியுள்ள நபா்கள் சாா்பில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை பரிசீலித்த நீதிபதி குழு, தமிழக அரசிடம் தனது பரிந்துரைகளை அளித்துள்ளது.

இபிஎஸ் பங்கேற்பு?: நீதிபதி குழு வழங்கியுள்ள பரிந்துரைகள் தொடா்பாக தமிழக அரசு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஆகியோா் பங்கேற்கும் கூட்டத்தில், லோக் ஆயுக்த அமைப்பின் தலைவா், உறுப்பினா்கள் யாா் என்பது இறுதி செய்யப்படவுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசின் அழைப்பை ஏற்று, அவா் பங்கேற்பாரா என்பது உறுதியாகவில்லை.

தமிழக அரசின் சாா்பில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், லோக் ஆயுக்த அமைப்புக்கு புதிய தலைவா், உறுப்பினா்கள் பெயா் இறுதி செய்யப்படும். இந்தப் பெயா்கள், ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்படும். அவா் அதனை ஏற்றுக் கொண்டு, லோக் ஆயுக்த அமைப்பின் புதிய தலைவருக்கு பதவியேற்பு உறுதிமொழி செய்து வைப்பாா்.

இதனிடையே, லோக் ஆயுக்த அமைப்பின் பொறுப்பு தலைவராக மு.ராஜாராம் செயல்பட்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.