கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அதிக பேருந்துகள் வாங்காததால், இருந்த பழைய பேருந்துகளை மாற்றுவதற்கான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகரங்களில் தாழ்தள பேருந்துகள் இயக்குவதற்கு உத்தரவிடப்பட்டு முதற்கட்டமாக சென்னையில் அடுத்த வாரம் அந்த பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. அதற்குப் பிறகு கோயம்புத்தூருக்கும் அந்த பேருந்துகள் வர உள்ளன. பழைய பேருந்துகளில் அடித்தள சட்டம் சிறப்பாக இருக்கக்கூடிய பேருந்துகளை புதிய கூடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 800 பேருந்துகள் கூடுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மின்சாரத்தில் இயங்கும் 500 பேருந்துகள் வாங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு, முதல் 100 பேருந்துகளுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் முடிக்கப்பட்டு முதல் 100 பேருந்துகள் சென்னையிலும், அடுத்த 400 பேருந்துகள் கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பயன்பாட்டிற்கு வரும். மாறி வருகின்ற கால சூழ்நிலை மற்றும் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப வேகமாக இயங்கும் பேருந்துகள் வரவுள்ளது. சாலை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பேருந்துகள் பயணிக்கும் வேகம் கூடியுள்ளது. எனவே, இதில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் சீர் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.