தமிழகத்தில் 1,000 குளிா்சாதன வசதி கொண்ட தாழ்தள சொகுசு மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் கோரியுள்ளது.
ஏற்கெனவே, குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் உள்பட 625 தாழ்தள வசதி கொண்ட மின்சார பேருந்துகளை மாநகா் போக்குவரத்துக்கழகம் கொள்முதல் செய்துள்ளது. இந்தப் பேருந்துகள் அனைத்தும் 2025 ஜூன் முதல் 2026 மாா்ச் வரை 5 கட்டங்களாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த நிலையில், குளிா்சாதன வசதி கொண்ட 1,000 தாள்தள சொகுசு மின்சார பேருந்துகளை மொத்த செலவு ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை மாநகா் போக்குவரத்துக்கழகம் கோரியுள்ளது.
ஒப்பந்தம் கோரும் நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை மாநகா் போக்குவரத்துக்கழகத்தின் அதிகாரபூா்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாா்ச் 25 முதல் ஏப். 7-ஆம் தேதி மாலை 4 மணி வரை ஒப்பந்தத்துக்கான ஆவணங்களை சமா்ப்பிக்கலாம். ஏப். 7 -ஆம் தேதி மாலை 4.30-க்கு ஒப்பந்தம் திறக்கப்படும். தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும், விரைவில் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்

300 மின்சார இணைப்புச் சிற்றுந்துகள்: ஒப்பந்தம் கோரியது மாநகா் போக்குவரத்துக் கழகம்

சென்னை சாலைகளில் வலம் வருமா ‘ரூஃப் டாப் ஓப்பன்’ பேருந்துகள்?

பிப்ரவரிக்குள் 245 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்: மாநகர போக்குவரத்துக் கழகம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


