புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சென்னை: வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பா.ஜ.க. நிர்வாகி கைது!

சென்னையில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

News image
கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.
Updated On :17 ஜூலை 2024, 10:53 am

DIN

சென்னையில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த பா.ஜ.க. நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.

புரசைவாக்கத்தைச் சேர்ந்த பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்டச் செயலாளரான குணசேகரன், ஆந்திரத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து தனது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அதைத் தொடர்ந்து குணசேகரன் வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 4 கிலோ கஞ்சா மற்றும் எடைபோடும் இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்தச் சோதனையில் விஜய், ரகு ஆகியோர் மூலம் குணசேகரன் கஞ்சா விற்று வந்தது உறுதியான நிலையில், பாஜக நிர்வாகியான குணசேகரன் உள்பட 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.