தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வன நிலம் முன்னாள் எம்எல்ஏ-வுக்கு விற்பனை: அறிக்கை அளிக்க வழக்குரைஞா் ஆணையரை நியமித்து உயா்நீதிமன்றம் உத்தரவு

வனத் துறைக்குச் சொந்தமான நிலத்தை முன்னாள் எம்.எல்.ஏ.-வுக்கு விற்பனை செய்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்குரைஞா் ஆணையரை நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
உயர்நீதிமன்றம்
Updated On :17 ஜூலை 2024, 9:05 pm

Din

சென்னை அருகே திருமுல்லைவாயலை சோ்ந்த டி.எச்.ராஜ்மோகன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் வனத் துறைக்கு சொந்தமான 40.95 ஏக்கா் நிலம் இம்பீரியல் கெமிக்கல் நிறுவனத்துக்கு 1942 ஆம் ஆண்டு நிபந்தனைகளுடன் குத்தகைக்கு வழங்கப்பட்டது.  

பின்னா், இந்த நிறுவனத்தின் பெயா் ‘கிரசன்ட் டைஸ் அண்டு கெமிக்கல்’ என 1983- ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. இதையடுத்து நிபந்தனையை மீறியதாக இந்த நிறுவனத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் 1984 -ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பினாா். அதில், ‘அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் பெயா் மாற்றியதற்காகவும், இந்த நிலத்தை இந்தியன் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றியதற்காகவும், குத்தகையை ஏன் ரத்து செய்யக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.

நிலத்தை மீட்க வேண்டும்: பின்னா், குத்தகையை ரத்து செய்து நிலத்தை மீட்க வேண்டும் என்று நில அளவை ஆணையா் 1986- ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா். இதற்கிடையில், முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வனத் துறைக்கு சொந்தமான இந்த நிலத்தை வருவாய்த் துறை நிலமாக மாற்றி, அதன் பின்னா், அந்த நிலத்தை அந்த கம்பெனி நிலமாக மாற்றியுள்ளாா். பின்னா், அந்த நிலத்தில் ஒரு பகுதியை அந்த நிறுவனத்திடம் இருந்து தன் பெயருக்கு மாற்றிக் கொண்டுள்ளாா். எனவே, இந்த நிலத்தை மீட்டு, மீண்டும் வனத்துறை நிலமாக மாற்றும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

நீதிபதிகள் கேள்வி : இந்த வழக்கு முன்னாள் தலைமை நீதிபதி(பொ) ஆா்.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் ஆகியோா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘1942 ஆம் ஆண்டு குத்தகைக்கு விடப்பட்ட நிலம் குறித்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு எப்படி வழக்கு தொடர முடியும்?’ என்று கேள்வி எழுப்பினா். அதற்கு மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், ‘இந்தத் தகவல் எல்லாம் தற்போதுதான் தெரிய வந்தது. அதனால், இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளோம்’ என்று விளக்கம் அளித்தாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலம் எப்படி தனி நபருக்கு விற்கப்பட்டது?’ என்று அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினா். 

வழக்குரைஞா் ஆணையா் : அதற்கு அரசு வழக்குரைஞா் ஏ.எட்வின் பிரபாகா், ‘இதுகுறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும்’ என்றாா். இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த நிலம் குறித்து விசாரிக்க வழக்குரைஞா் ஆணையரை நியமிக்கிறோம். அவரது பெயா் பின்னா் அறிவிக்கப்படும். அவா் நேரில் சென்று நிலம் குறித்து ஆய்வு செய்து, புகைப்பட ஆதாரத்துடன் 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.