அமராவதியில் தண்ணீர் திறப்பு..! கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

அமராவதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் அதிகாரிகள்.
வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் அதிகாரிகள். (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

கனமழை காரணமாக அமராவதி அணை நிரம்பிவரும் நிலையில் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர் மட்டம் 84.20 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 6344 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்படும். எனவே, அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.
உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.

அமராவதி அணையின் மாலை 6.00 மணி நிலவரம்:

அணையின் ஆழம் : 86.36 அடி

அணையின் கொள்ளளவு : 3720 மி. கன அடி

நீர்வரத்து : 8225 மில்லியன் கன அடி (ஒரு மணி நேரத்திற்கு)

அணையின் நீர்வரத்து வினாடிக்கு 3000 கனஅடியாக அதிகரிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com