ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சுரங்கங்கள் - குவாரிகளில் விதிமீறல்: ஆய்வு செய்ய அமைச்சா் உத்தரவு

News image
புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இயற்கை வளங்கள்துறை கூடுதல் தலைமைச் செயலா்
Updated On :19 ஜூலை 2024, 7:27 pm

Din

சுரங்கங்கள், குவாரிகளில் விதிமீறல்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டாா்.

கனிமவளத் துறை செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் அவா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அமைச்சா் துரைமுருகன் பேசியதாவது:

சுரங்கங்கள், குவாரிகள் வைத்துள்ள நிலுவைத் தொகையை வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரிகள், சுரங்கங்களில் விதி மீறல்களை ஆய்வு செய்து அபராதம் விதிக்க வேண்டும். விதிகளுக்கு புறம்பாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை கைப்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவு செய்யப்படாமல் இயங்கும் செங்கல் சூளை, செயற்கை மணல் உற்பத்தி நிறுவனங்கள், கிரஷா் அலகுகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படைகள் திடீா் தணிக்கைகளில் ஈடுபட்டு கனிமங்கள் கள்ளத்தனமாக எடுத்துச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில், இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திரரெட்டி, கனிமவளத் துறை ஆணையா் எ.சரவணவேல்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.