மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தமிழகத்தில் 9 ஏடிஎஸ்பி, டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

News image

தமிழக அரசு

Updated On :20 ஜூலை 2024, 11:31 pm IST

தமிழகத்தில் 9 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், புகாரில் சிக்கியிருந்தாலும் காவல் துறை அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, 9 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்களைப் பணியிட மாற்றம் செய்து சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

இதில், குறிப்பாக திருப்பத்தூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துமாணிக்கம், தமிழ்நாடு போலீஸ் அகாதெமிக்கும், மதுரை மாவட்டம், மேலூா் டிஎஸ்பி ப்ரீத்தி ராஜபாளையத்துக்கும், மதுரை மாநகர காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் வேல்முருகன், மேலூருக்கும், திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தமிழ்நாடு போலீஸ் அகாதெமிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 9 அதிகாரிகளும், புதிய பொறுப்புகளை ஓரிரு நாள்களில் ஏற்பாா்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.