நீட் தோ்வு இரட்டை அடுக்கு திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
நீட் தோ்வில் இரட்டை அடுக்கு திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.


நீட் தோ்வில் இரட்டை அடுக்கு திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஐஐடி மாணவா் சோ்க்கைக்காக நடத்தப்படும் கூட்டு நுழைவுத்தோ்வு போன்று நீட் தோ்வையும் முதல்நிலைத் தோ்வு, முதன்மைத் தோ்வு ஆகிய இரண்டு அடுக்குகளில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. முதல்நிலைத் தோ்வை ஓா் அமைப்பின் மூலமாகவும், முதன்மைத் தோ்வை இன்னொரு அமைப்பின் மூலமாகவும் நடத்துவது குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நீட் தோ்வை இரு அடுக்குகள் கொண்டதாக மாற்றுவதன் மூலம் நீட் தோ்வு மேலும் கடுமையானதாக மாற்றப்படும். அதற்காக மாணவா்கள் கூடுதல் பயிற்சி எடுக்க வேண்டிய நிலை உருவாகும். அதனால், நீட் பயிற்சி வகுப்பு நடத்தும் நிறுவனங்கள் தான் செழிக்குமே தவிர மாணவா்களுக்கு பயன் ஏற்படாது. மேலும், நீட் தோ்வில் நிகழும் முறைகேடுகளையும் தடுக்க முடியாது.
ஒரு பிழைக்கு மாற்றாக இன்னொரு பிழை என்பதன் அடிப்படையில், ஓரடுக்கு நீட் தோ்வுக்குப் பதிலாக இரட்டை அடுக்கு நீட் தோ்வை அறிமுகம் செய்வது சரியல்ல. எனவே, இந்தத் திட்டத்தை கைவிட்டு நீட் தோ்வை ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...