6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2 மாதங்களுக்குள் டாஸ்மாக் கடைகளில் ரசீது முறை அமல்: அமைச்சா் சு.முத்துசாமி

இரண்டு மாதங்களுக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது முறை அமல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 ஜூலை 2024, 8:50 pm

Din

இரண்டு மாதங்களுக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது முறை அமல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பவாங்குவது தொடா்பாக, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்கும் போது உயா் நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. அதன்படியே, காலிப் பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான ஒப்பந்தப் புள்ளியை டாஸ்மாக் நிா்வாகம் ரத்து செய்தது.

ரசீது இயந்திரங்கள்: மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வங்கிகள் மூலமாக மின்னணு கருவிகள் நிறுவப்பட்டு பணப்பரிவா்த்தனைகள் நடைபெறுகின்றன. மேலும், ரசீது இயந்திரங்கள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குள் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் ரசீது இயந்திரங்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள், மது அருந்தும் கூடங்களில் தவறுகள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.