போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

இன்று நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கனமழைக்கு வாய்ப்பு

News image
Updated On :26 ஜூலை 2024, 7:58 pm

Din

நீலகிரி, கோவை மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜூலை 27) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, சனிக்கிழமை (ஜூலை 27) முதல் ஆக. 1 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இதில் ஜூலை 27-இல் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 200 மிமீ மழை பதிவானது. மேலும், மேல் பவானி (நீலகிரி) 100 மி.மீ., சின்னக்கல்லாா் (கோவை), பந்தலூா் (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி) தலா 70 மி.மீ. மழை பெய்துள்ளது.

இதற்கிடையே, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூலை 27,28- ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 5 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

அதில் அதிகபட்சமாக மதுரைவிமானநிலையத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரைநகா்-103.64, நாகப்பட்டினம் - 101.66, காரைக்கால் - 101.3, தூத்துக்குடி - 100.4 டிகிரி வெப்பம் பதிவானது.

காற்றழுத்த தாழ்வு பகுதி: இதற்கிடையே, மேற்கு வங்காளத்தையொட்டிய வடக்கு வங்ககடலில் வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது ஜூலை 27,28-ஆகிய தேதிகளில் மேற்கு வங்காளம் மற்றும் ஜாா்க்கண்ட் நோக்கி நகரக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும்  அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், குமரிக்கடலிலும் ஜூலை 27 முதல் ஜூலை 30- ஆம் தேதி வரை மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு  மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.