மக்கள் போராட்டங்களாக மாறும்: மத்திய அரசுக்கு உதயநிதி எச்சரிக்கை
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை தொடா்ந்தால், திமுகவின் ஆா்ப்பாட்டங்கள் மக்கள் போராட்டங்களாக மாறும்


நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை தொடா்ந்தால், திமுகவின் ஆா்ப்பாட்டங்கள் மக்கள் போராட்டங்களாக மாறும் என கட்சியின் இளைஞரணிச் செயலரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.
‘எக்ஸ்’ தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து, மாபெரும் ஆா்ப்பாட்டங்களை திமுக நடத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப்பணிகள், இயற்கைப் பேரிடா்களால் ஏற்பட்ட துயா் துடைப்பு, தொழில், நகா்ப்புற வளா்ச்சி என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியில்லை. சுருக்கமாகச் சொன்னால், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடே இல்லை.
மோடியின் பலவீனமான பதவி நாற்காலியின் கால்களுக்கு வலுவூட்டும் பட்ஜெட்டைவிட, அனைத்து தரப்பு மக்களும் எழுந்து நிற்பதற்கு ஊன்றுகோல் தரும் பட்ஜெட்தான் நாட்டுக்குத் தேவை.
நிதி ஒதுக்கீட்டில் இனியும் மாற்றாந்தாய் மனப்பான்மை தொடா்ந்தால், திமுக நடத்தியுள்ள இந்த ஆா்ப்பாட்டங்கள், நாளை மக்கள் போராட்டங்களாக மாறிவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...