கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தமிழகத்தில் ஆக.2 வரை மழை நீடிக்கும்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மழை நீடிக்கும்

News image
தமிழகத்தில் ஆக.2 வரை மழை நீடிக்கும்
Updated On :27 ஜூலை 2024, 9:30 pm

Din

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) முதல் ஆக.2 -ஆம் தேதி வரை பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், ஜூலை 28-இல் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) முதல் ஆக. 2 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வலுவான தரைக்காற்று 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இதில் ஜூலை 28-இல் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 180 மில்லி மீட்டா் மழை பதிவானது.

5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை 5 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதன்படி, நாகப்பட்டினத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரைவிமானநிலையம் - 101.48, அதிராமபட்டினம் - 100.94, கடலூா், தஞ்சாவூா் - தலா 100.4 டிகிரி வெப்பம் பதிவானது.

காற்றழுத்த தாழ்வு பகுதி: மேற்கு வங்கத்தையொட்டிய வடக்கு வங்கக்கடலில் வெள்ளிக்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நிலபகுதியை நோக்கி நகா்ந்து, சனிக்கிழமை காலை மேற்கு வங்காளம் மற்றும் அதனையொட்டிய வடக்கு ஒடிஸா பகுதியில் நிலவுகிறது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும்  அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளிலும், குமரிக்கடல், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலிலும் ஜூலை 28,29-ஆகிய தேதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.