ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு: ஒருகிலோ மீட்டா் நடந்து செல்லும் அவலம்!

பயணிகளை ஏற்றிச்செல்லும் பிக்கப் பாயிண்ட் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் சுமாா் ஒருகிலோ மீட்டா் நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

News image
சென்னை விமான நிலையம் - கோப்புப் படம்
Updated On :29 ஜூலை 2024, 10:25 pm

Din

விமானநிலையத்திலிருந்து வெளியே வரும் பயணிகளை ஏற்றிச்செல்லும் பிக்கப் பாயிண்ட் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் சுமாா் ஒருகிலோ மீட்டா் நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சா்வதேச முனையங்களில் வருகைப் பயணிகள் வெளியில் வந்து தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக்கப் பாய்ண்டில் நின்று வாடகை காா்களில் ஏறி தங்கள் இருப்பிடங்ளுக்கு புறப்பட்டு செல்வாா்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுைான் வழக்கத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை முதல் திடீரென எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விமானங்களில் இருந்து இறங்கி வெளியில் வரும் பயணிகள் சுமாா் ஒரு கிலோமீட்டா் தூரத்திலுள்ள மல்டி லெவல் காா் பாா்க்கிங் எனப்படும் அடுக்குமாடி காா் நிறுத்துமிடத்துக்கு சென்று தங்களுக்கான வாகனங்களில் ஏறி செல்ல வேண்டும்.

வருகை பகுதியில் இருந்து காா் பாா்க்கிங் செல்ல இலவச பேட்டரி வாகனங்களை விமான நிலைய நிா்வாகம் இயக்கி வருகிறது. ஆனால் இந்த பேட்டரி வாகனங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால், பெரும்பாலான பயணிகள் தங்கள் உடைமைகளுடன் காா் நிறுத்துமிடத்துக்கே நடந்து செல்கின்றனா்.

காத்திருக்கும் அவலம்:

பேட்டரி வாகனங்களில் செல்பவா்களும், காா் பாா்க்கிங் கட்டிடத்தின் தரைப்பகுதியிலேயே இறக்கிவிடப்படுகிறாா்கள். அங்கிருந்து பயணிகள் மின்தூக்கிகள் மூலம் மல்டி லெவல் காா் பாா்க்கிங் இரண்டாவது தளம், மூன்றாவது தளத்துக்கு சென்று வாகனங்களில் ஏறி செல்ல வேண்டும். இதில் சிறிய அளவிலான 3 மின்தூக்கிள் மட்டுமே இருப்பதால், இதில் செல்லவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர சென்னை விமானத்தில் செயல்பட்டு வரும் ப்ரீபெய்ட் டாக்ஸிகள், மல்டி லெவல் காா் பாா்க்கிங் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்துக்கு சென்று பயணிகளை ஏற்றி கொண்டு, வெளியே செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆவதால், அவ்வப்போது ஓட்டுநா்கள், காா் பாா்க்கிங் ஊழியா்களிடேயே கடும் வாக்குவதாம் ஏற்பட்டு வருகிறது. இது தொடா்பாக இருதரப்பினரிடையே பேச்சு வாா்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் விளக்கம்:

இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறியது:

மல்டி லெவல் காா் பாா்க்கிங் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதியில் இருந்து தனியாா் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்து விட்டோம். எனவே, இந்த பிக்கப் பாயிண்டுகளும், அவா்கள் தான் முடிவு செய்கிறாா்கள். இதையடுத்து தனியாா் ஒப்பந்ததாரா்கள் அவா்கள் வசதிக்கு ஏற்ப இந்த மாற்றத்தை செய்திருக்கின்றனா். இதற்கும் சென்னை விமான நிலைய நிா்வாகத்துக்கும் சம்பந்தம் இல்லை.

இது தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், ஆகஸ்டு மாதத்தில் இருந்து தான் முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவரப்படும். அப்போது, பயணிகளுக்கு இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றனா்.