முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை! 43-வது முறை...
அணைக்கு காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை


சேலம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், 43வது முறையாக முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையின் முழு நீர் கொள்ளளவு 120 அடி.
மேட்டூர் அணை முழுவதும் நிரம்பிவிட்டதால், அணையின் பாதுகாப்புக் கருதி, 16 கண் மதகுகள் வழியாக, மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி வழியாகவும் வெளியேற்றப்படுகிறது
காவிரி டெல்டா பாசன விவசாயத்துக்காக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வழக்கமாக பாசனத்துக்கு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை வரலாற்றிலேயே, 13வது முறையாக கால்வாய் பாசனத்துக்கு முன்கூட்டியே அணை திறக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நீர் திறப்பது இது 63வது முறையாக உள்ளது. முதல் கட்டமாக 300 கண அடி நீர் திறக்கபடுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15 -வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி, தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து, அணை நிரம்பியிருக்கும் நிலையில், முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் என மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43வது முறையாக நிரம்பியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...