கொல்கத்தா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து 182 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் இன்று காலை கொல்கத்தா புறப்படத் தயாராகவிருந்தது. அப்போது அந்த விமானத்துக்கு மிரட்டல் விடுத்து மர்ம நபரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்திருக்கிறது.
உடனே விமானத்தில் இருந்த 182 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து விமானம் முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் விமானத்தில் இருந்து எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் மிரட்டல் அழைப்பு வெறும் புறளி என்பது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அந்த விமானம் கொல்கத்தாவுக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.
அண்மை தினங்களாக விமானத்திற்கு வரும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் விமானப் போக்குவரத்து குறித்த அச்சம் பயணிகளிடையே எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...