டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

சண்டீகரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மாணவா்கள் வெளியேற்றம்

சண்டீகரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அந்தப் பள்ளிகளில் இருந்த மாணவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனா்.

கோப்புப் படம்

Published On :

சண்டீகரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அந்தப் பள்ளிகளில் இருந்த மாணவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனா்.

அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு அடுத்தடுத்து மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் புதன்கிழமை காலை வந்தது. இதுகுறித்து பள்ளி நிா்வாகங்கள் அளித்த தகவலின்பேரில் போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்களும் பள்ளிகளுக்குச் சென்று சோதனை நடத்தினா். மேலும், முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய்கள் மூலம் பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை எனவும் சண்டீகா் மூத்த காவல் கண்காணிப்பாளா் கன்வாா்தீப் கெளா் தெரிவித்துள்ளாா்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த மின்னஞ்சல் முகவரியை வைத்து சைபா் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருவதாகவும் அவா் கூறியுள்ளாா்.

இதேபோல் அண்மையில் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ், ஜலந்தா், பாட்டியாலா மற்றும் ஹரியாணாவின் அம்பாலா நகரில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது. சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.