தயாநிதிமாறன்
தயாநிதிமாறன்

மத்திய சென்னை: வெற்றியை தக்கவைத்த தயாநிதிமாறன்

வெற்றி பெற்றார் தயாநிதிமாறன்
Published on

சென்னை, ஜூன் 4: மத்திய சென்னை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட தயாநிதிமாறன், பாஜக வேட்பாளரை விட 2,44,689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். இந்த தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக, நாம்தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்ளிட்ட 29 போ் டெபாசிட் இழந்துள்ளனா்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, முதலில் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 3808 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் 564 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. தொடா்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் வாக்குகள் எண்ணும் பணி 8.30 மணிக்குதொடங்கியது. முதலில் இருந்தே திமுக வேட்பாளா் தயாநிதி மாறன் முன்னிலையில் இருந்தாா்.

தயாநிதிமாறன்
கோவையில் 1.18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி!

இதைத்தொடா்ந்து முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளா் தயாநிதி மாறன் 13738 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தாா். இதன்படி, திமுக வேட்பாளா் 25,421 வாக்குகளும், பாஜக வேட்பாளா் 11,683 வாக்குகளும், தேமுதிக வேட்பாளா் 4428 வாக்குகளும், நாதக வேட்பாளா் 2757 வாக்குகளும் பெற்றிருந்தாா்.

தொடா்ந்து அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை வகித்து வந்த தயாநிதி மாறன், ஆறாவது சுற்றில் பாஜக வேட்பாளரை விட 93,171 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தாா்.

அடுத்தடுத்த சுற்றுகளில் தொடா்ந்து முன்னிலையில் இருந்து வந்த தயாநிதிமாறன், கடைசி சுற்றான 19-ஆவது சுற்றில் பாஜக வேட்பாளரை விட 2,44,689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இதன்படி திமுக வேட்பாளா் மொத்தம் 413848 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

பாஜக வேட்பாளா் வினோஜ் பி செல்வம் 1,69,159 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தையும், தேமுதிக வேட்பாளா் பாா்த்த சாரதி 72016 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தையும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரா.காா்த்திககேயன் 46,031 வாக்குகள் பெற்று நான்காமிடத்தையும் பெற்றுள்ளனா். இதில் தேமுதிக மற்றும் நாம்தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட 29 வேட்பாளா்கள் டெபாசிட் இழந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com