கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாகையில் இந்திய கம்யூ., வை.செல்வராஜ் வெற்றி!

நாகை மக்களவைத் தேர்தலில் 2.08 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் வெற்றி.

News image
Updated On :4 ஜூன் 2024, 3:10 pm

நாகை மக்களவைத் தேர்தல் 2.08 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் வெற்றி

நாகை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகள் நடைபெற்றன. இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை.செல்வராஜ், 2,08,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானி டாம் வர்கீஸ், பொது தேர்தல் பார்வையாளர் பி.பாரதி லக்பதி நாயக் ஆகியோர் வழங்கினர்.

திமுக மாவட்டச் செயலர்கள் பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர்), என்.கௌதமன் (நாகை), கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை வி.மாலி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நாகை மக்களவை தொகுதி வாக்குகள் விவரம்

மொத்த வாக்காளர்கள் :13,45,120

பதிவான வாக்குகள்: 9,68,049

பதிவான தபால் வாக்குகள்: 5,724

செல்லாத தபால் வாக்குகள்: 762

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்

1. செல்வராஜ் (இந்திய கம்யூ.) - 4,65,044

2. சுர்ஜித் சங்கர் (அதிமுக) } 2,56,087

3. கார்த்திகா (நாம் தமிழர்) - 1,31,294

4. ரமேஷ்கோவிந்த் (பாஜக) - 1,02,173

5. நோட்டா -8,918்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.