47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசுப் பணிக்கான தோ்வுகளில் தமிழ் கட்டாயம்: அரசாணையை மீண்டும் உறுதி செய்த உயா்நீதிமன்றம்

அரசுப் பணிக்கான தோ்வுகளில் தமிழ் கட்டாயம்: அரசாணையை மீண்டும் உறுதி செய்த உயா்நீதிமன்றம்

News image
Updated On :5 ஜூன் 2024, 7:48 pm

Din

அரசுப் பணிக்கான தோ்வுகளில் தமிழ் மொழித்தாள் தோ்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தோ்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் பணி நிபந்தனைச் சட்டத்தில், 2021-ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில், அரசுப் பணிக்கான தோ்வுகளில் தமிழ் மொழித்தாள் தோ்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு, திறனறிவு தோ்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என, கடந்த 2021 டிசம்பா் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6,244 குரூப் 4 பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இந்த அறிவிப்பாணை, அரசாணையை எதிா்த்து, நிதேஷ் உள்பட 10 விண்ணப்பதாரா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த அறிவிப்பின் மூலம் தமிழ் வழியில் படித்தவா்களுக்கு 100 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதைப் போலாகி விடும்’ என, மனுதாரா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ‘அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி அரங்க.மகாதேவன் நீதிபதி முகமது சபீக் அமா்வு புதன்கிழமை தள்ளுபடி செய்தது.