ராமநாதபுரத்தில் 'டம்மி' பன்னீர்செல்வங்கள் நிகழ்த்திய சாதனைதான் என்ன?

ராமநாதபுரத்தில் களமிறங்கிய 5 பன்னீர்செல்வங்கள்..
இன்று மாலை வேட்பாளரை அறிவிக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்
இன்று மாலை வேட்பாளரை அறிவிக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்
Published on
Updated on
1 min read

2024 மக்களவைத் தேர்தலில் அதிகம் பேசுபொருளானது ராமநாதபுரம் தொகுதி. இங்கு போட்டியிட்ட ஐந்து பன்னீர்செல்வங்கள் தேர்தலில் என்ன மாற்றத்தை நிகழ்த்துவதற்காக களமிறக்கப்பட்டார்களோ அது நிறைவேறவில்லை என்றே கூறலாம்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், வேட்பு மனு தொடக்கம் முதலே ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதான் அதிக செய்திகளைக் கொடுத்தது. காரணம் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு இணையாக ஐந்து பன்னீர்செல்வங்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

பாஜக கூட்டணியில், ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிட, மற்ற பன்னீர்செல்வங்களும் ராமநாதபுரத்தில் சுயேச்சையாகவே போட்டியிட்டனர். செவ்வாயன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஆனால், உண்மையான ஓ. பன்னீர்செல்வத்தின் வாக்குகளை, டம்மி வேட்பாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஐந்து பேருக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாகவே 9 ஆயிரம் வாக்குகள்தான் கிடைத்தன. ஓ. பன்னீர்செல்வத்துக்கு 3.42 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன.

இன்று மாலை வேட்பாளரை அறிவிக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்
பாரதிய ஜனதாவுக்கு இடமில்லாத மாநிலங்கள்!

ராமநாதபுரம் தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி 5,09,664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள நவாஸ்கனியை எதிர்த்து போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் 3,42,882 வாக்குகள் பெற்றிருந்தார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 1,66,782.

பன்னீர்செல்வத்துக்கு மட்டுமல்ல, நவாஸ் கனி பெயரிலும், சசிகனி பெயரிலும் கூட இரண்டு சுயேச்சைகள் இங்கு போட்டியிட்டனர். இவர்களும் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. ஒட்டுமொத்தமாக 3000 வாக்குகள் பெற்றிருந்தனர்.

பொதுவாக தேர்தலின்போது குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்கள் களத்தில் இறக்கப்படுவார்கள். உண்மையான வேட்பாளருக்கு விழ வேண்டிய வாக்குகளை தவறுதலாக இவர்களுக்கு விழ வைப்பதே நோக்கம்.

இன்று மாலை வேட்பாளரை அறிவிக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்
உள்ளபடியே மக்கள் யார் பக்கம்?

இதுபோல ஒரு சதி வெற்றியும் பெற்றிருக்கிறது. அதாவது 2016 தமிழக பேரவைத் தேர்தலின்போது, சிதம்பரம் தொகுதி எம்.பி. தொல். திருமாவளவனையே இந்த உக்தி தோற்கடித்திருந்தது.

அதாவது காட்டுமன்னார் கோயில் தொகுதியில் நடந்த பேரவைத் தேர்தலின்போது, தொல். திருமாவளவன 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சுயேச்சையாக போட்டியிட்ட டி. திருமாவளவனுக்கு 289 வாக்குகள் கிடைத்திருந்தன. எனவே, இந்த வாக்குகள்தான் திருமாவளவன் வெற்றி வாய்ப்பை விழுங்கியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com